குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிராகரித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியையும் இணைத்து ஆட்சி அமைக்கும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பானது ஓர் தந்திரம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் இந்த நிலையில், கட்சியில் இணைந்து கொண்டால் கிடைக்கும் வாக்குகளும் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றியீட்டும் எனவும், மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுத்து ஒதுக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.