பின்லாந்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சாலி நினிஸ்டோ அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகவுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி சார்பில் சாலி நினிஸ்டோவும், எதிர் கட்சியான கிரீன்ஸ் கட்சி சார்பில் பெக்கா ஹாவிஸ்மோவும் போட்டியிட்டனர்.
இநதத் தேர்தலில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாகவும் இதில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் சாலி நினிஸ்டோ 62.1 சதவீதம் வாக்குகள் பெற்று அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சாலி நினிஸ்டோ மீண்டும் ஜனாதிபதியாக பதவியேறக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தளவு பெரும்பான்மை வெற்றியை தான் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள சாலி நினிஸ்டோ தன்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற கடுமையாக உழைக்க முடிவுசெய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.