குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கூட்ட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மற்றும் பாரிய நிதிமோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கைகள் பாராளுமன்றில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். இந்த விவாதங்களை நடாத்தும் நோக்கில் ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மீதொட்டுமுல்ல அனர்த்தம் இடம்பெற்ற வேளையில் பிரதமர் நாட்டில் இல்லாத போதும் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றை கூட்டியதாக விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.