குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் ஆட்சி நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் 2020ம் ஆண்டு வரையில் ஆட்சியில் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் மிகப் பெரிய தனிக்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி திகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015;ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.