குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சதி செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பொரளையில் இரகசிய இடமொன்றில் பசில் ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முனைப்புக்களில் பசில் ராஜபக்ஸ ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் இந்த அரசாங்கத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.