குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய இளவரசர் எட்வர்ட்டிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இளவரசர் எட்வர்ட் எதிர்வரும் மாதம் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையின் 70ம் சுதந்திர தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாக பங்கேற்கும் நோக்கில் இளவரசர் இலங்கைக்கு பயண் செய்ய உள்ளார்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென இலங்கை மீது, அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் ஆறு மாத காலப் பகுதியில் 70000 தமிழ் மக்களை கொலை செய்த படையினரே, இளவரசர் எட்வர்ட்டிற்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தில் கணவரை இழந்த 90000 பெண்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் என குறிப்பிடப்படுகிறது. இராணுவ முகாம்களில் தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படுவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் தெரிவித்துள்ளது.
யுத்தக் காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றிய போதிலும் இதுவரையில் அவை நடைமுறைப்படுத்தப்டவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.