குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எல்பிட்டி பிரதேச சபைக்கான தேர்தலை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனநாயக தேசிய முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று காரணமாக இவ்வாறு தேர்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கே.ரீ.கித்சிறி, புவனெக அலுவிஹார மற்றும் பிரசன்ன ஜயவர்தன உள்ளிட்ட நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்படும் வரையில் தேர்தலை ஒத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.