142
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோப் குழு அறிக்கை வெளியிடப்பட்ட போது ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்திருக்காவிட்டால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பர் என அவர் தெரிவித்துள்ளார். இந்த மோசடியுடன் பிரதமருக்கு தொடர்பு உண்டு என்ற காரணத்தினால் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்
Spread the love