டெல்லி ரோகினியில் உள்ள பாபா விரேந்திர தேவ் தீக்சித்தின் ஆச்சிரமத்தை அகற்றும் பணியை மாநகராட்சி ஆரம்பித்துள்ளது. பாபா விரேந்தர் தீக்சித்துக்கு சொந்தமான அத்யாத்மிக் விஷ்வா வித்யாலயா என்னும் ஆச்சிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட 41 சிறுமிகள் மற்றும் பெண்கள் மீட்கப்பட்டிருந்தனர். டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லி பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைகள் நலக் குழுவானது இணைந்து இவர்களை மீட்டிருந்தது.
இதையடுத்து ஆசிரமத்தில் பெண்கள், சிறுமிகள் சித்ரவதை செய்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. தீக்சித் மீது இரண்டு வழக்குகளும் ஆசிரமத்தில் அதிகாரிகள் சோதனை செய்தபோது தகராறில் ஈடுபட்ட நபர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரோகினியில் உள்ள பாபா விரேந்திர தேவ் தீக்சித்தின் ஆசிரமத்தை இடிக்கும் பணியில் டெல்லி மாநகராட்சி ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது