ஒரு மக்கட் கூட்டம் தமது தேவைகளையும் வழிகாட்டல்களையும் ஒற்றுமையுடன் முன்னெடுத்துச் செல்ல முனையும் போதே அப்போதே அவர்கள் தனித்துவ நிலைக்கு சென்றுள்ளனர் என்பது பொருளாகும் என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாம் சார்ந்த தேவைகளைத் தாமே முழுமையாக நிறைவேற்றும் போது அவர்கள்மீது வேறு எவரும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவோ அல்லது அவர்களைக் கட்டுப்படுத்தவோ முடியாதவர்களாக மாற்றப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
இன்றைய தினம் இடம்பெற்ற அல்வாய் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் ஆண்டுவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சதாகாலமும் ஏனையவர்களின் உதவிகளின் கீழ் வாழுகின்ற சமூகம் அடக்கப்பட்டவர்களாக ஒடுக்கப்பட்டவர்களாக ஒடுங்கி வாழவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதே உண்மை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கல்வியை முடிவுறுத்தி விட்டு வேலைக்காகக் காத்திருக்கின்ற இளைஞர் யுவதிகள் வாழ்வில் உயர் நிலையை அடைய வேண்டுமாயின் உங்களுக்கு இசைவான கலைகளில், திறன்களில் தொடர் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள். அப்போது தான் வெற்றி வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வரும எனவும் அவர் தெரிவித்துள்ளார்.