அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் பின்னால் இருக்க, ஒரே மேசையில் அமர்ந்து ராஜபக்ச குடும்பத்தினர் அரசாங்கத்தின் கொள்கைகள், பொருளாதார முகாமைத்துவம் மற்றும் உயர் பதவிகளுக்கான நியமனங்கள் பற்றிய தீர்மானங்களை மேற்கொண்டமை தனக்கு நினைவுக்கு வருகிறது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய அரசியல் நோக்கமும் நாட்டின் எதிர்காலத் திட்டமும் கொள்கைகளும் அற்ற கட்சி ஒன்றைத் தாபித்து தனியொரு குடும்பத்தினால் மீண்டும் அரசாங்கத்தை அமைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளர்h.
ஊழல், மோசடிகள் மற்றும் குடும்ப ஆட்சி என்பனவற்றாலேயே 2015 ஜனவரி 08 ஆம் திகதி அந்த அரசை மக்கள் நிராகரித்த நிலையில், மீண்டும் அவர்கள் குடும்ப ஆட்சியையும் ஏகாதிபத்தியத்தையும் ஏற்படுத்த முடியாது எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.