குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தலை நடாத்துவதற்கு சிறிதளவு கால அவகாசம் தேவை என தாய்லாந்து பிரதமர் பிரவுத் சான்-ஓச்சா (Prayuth Chan-ocha )தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்காக நாட்டை ஆயத்தப்படுத்துவதற்கு சிறிதளவு கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை ஆட்சி கவிழ்த்து கடந்த 2014ம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றியிருந்த பிரவுத் சான்-ஓச்சா பல தடவைகள் தேர்தலை நடத்துவதாக அறிவித்த போதிலும் தேர்தலை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் எதிர்வரும் நவம்பர் தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்த போதும் தற்பொழுது தேர்தலை நடாத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது