2020-ம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா நடத்தவுள்ளது. முதன்முறையாக பெண்கள் மற்றும் ஆண்களுக்கான இருபதுக்கு இருபது உலகக் கோப்பை ஒரே நாட்டில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் போட்டி நடைபெறும் இடங்களாக அடிலெய்டு, பிரிஸ்பன், கன்பெரா, ஜீலாங், ஹோபர்ட், மெலN;பர்ன், பெர்த் மற்றும் சிட்னி ஆகிய 8 நகரங்கள் போட்டியை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டு நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
பெண்களுக்கான இருபதுக்கு இருபது உலகக் கோப்பை தொடர் 2020-ம் ஆண்டு பெப்ரவரி 21 முதல் மார்ச் 8ம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆண்களுக்கான உலகக் கோப்பை தொடர் ஒக்டோபர் மாதம் 18 இலிருந்து நவம்பர் 15ம் திகதிவரை வரை நடைபெறவுள்ளது. இரு தொடர்களின் இறுதி ஆட்டங்களும் மெல்பேர்னில் நடத்தப்பட உள்ளதுடன் பெண்கள் பிரிவில் 10 அணிகளும், ஆண்கள் பிரிவில் 16 அணிகளும் விளையாட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.