நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனா முன்னணி சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய் அக்கினேனியை தான் திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களின் திருமணம் எதிர்வரும் வரும் மார்ச் 8ம் திகதி நடைபெறவுள்ளது.
கீர்த்தனாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அக்ஷய் அக்கினேனி பீட்சா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ததுடன் தரமணி, மெர்சல் உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராகவும் பணியாற்றியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தனா இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினப் பெற்றிருந்தார்.
தற்போது இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றும் கீர்த்தனா, விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.