253
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தை பூச தினத்தினை முன்னிட்டு இன்று புதன் கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச திருவிழா இடம்பெற்றது. மாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து முருகபெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் உள்வீதி யுலா வந்து , மாலை 5.30 மணியளவில் திருமஞ்சத்தில் எழுந்தருளி முருகபெருமான் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து திருமஞ்சத்தில் முருக பெருமான் வெளி வீதியுலா வந்தார்.
Spread the love