குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச மன்னிப்புச் சபையின் துருக்கி பொறுப்பாளரை விடுதலை செய்யும் தீர்மானம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் துருக்கிக்கான பொறுப்பாளர் தானீர் கிலிக் (taner kilic ) கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு பேணியதாக கிலிக் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எனினும் தாம் இவ்வாறு தொடர்பு பேணவில்லை என கிலிக் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலகமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கிலிக்கை பிணையில் விடுதலை செய்வதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்பொழுது இந்த பிணை அறிவிப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்தான்புல்லில் அமைந்துள்ள ஒர் நீதிமன்றம் பிணை வழங்க அனுமதி வழங்கிய போதிலும், அரச தரப்பு சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் குறித்த நீதிமன்றம் பிணை வழங்கப்படக் கூடாது என அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியின் சட்டம் ஒழுங்கு நீதித்துறையின் நிலைமையை இந்த விடயத்தைக் கொண்டே மதிப்பீடு செய்து கொள்ள முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் துருக்கிப் பொறுப்பாளர் விடுதலை
n: Feb 1, 2018 @ 02:47
சர்வதேச மன்னிப்புச் சபையின் துருக்கி நாட்டுப் பொறுப்பாளர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் துருக்கிக்கான பொறுப்பதிகாரி தானீர் கிலிக் (taner kilic ) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கிலிக், பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கிலிக்கை பிணை அனுப்படையில் விடுதலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது