குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பிலான சட்டம் விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பிலான சட்டத்திற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதனை அரசாங்கம் பூரணமாக புரிந்துகொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டிக்கும் திருகோணமலைக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலையொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் நிறுவனமொன்று திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.