குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டை யார் ஆட்சி செய்கின்றார்கள் என்பது புரியவில்லை என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆளும் கட்சிக்கு வாக்களிக்குமாறு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கோரி வருகின்றன. எனினும், இதில் எந்த கட்சி உண்மையிலேயே ஆளும் கட்சி என்பது தொடர்பில் சந்தேகம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கினிகத்தேன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி தமக்கே உரியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ உரிமை கோர முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவாகும் உறுப்பினர்களுக்கு அபிவிருத்திப் பணிகளுக்கான நிதி நேரடியாகவே கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.