என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி.யின் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்தப் போராட்டமானது சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிஜமன்றில் என்.எல்.சி. பொது மேலாளர் தியாகராஜன் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்தபோதே போராட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உயர்நீதிமன்றினால் விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களின் பிரச்சினைகளை தொடர்பில் தொழிலாளர் நல ஆணையாளர் முன்பு சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நீதிமன்றின் தடை உத்தரவை மீறியும், சமரச பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் ஒப்பந்த தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.