“என்னை பாலியல் தொழிலுக்கு அழைப்பது (sexual trade) போன்று பேசியதால் தொழில் அதிபர் மீது காவற்துறையில் முறைப்பாடு செய்தேன்” என நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவற்துறையினர் அழகேசனை கைது செய்துள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமலா பால், “மலேசியாவில் நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சிக்காக நான் நடன பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது ஒருவர் என்னிடம் வந்து என்னை பாலியல் ரீதியாக டிரேட் பண்ற மாதிரி பேசினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், வெட்கப்பட்டேன். அதனால் தான் காவற்துறையில் முறைப்பாடு கொடுத்தேன். நான் நடன பயிற்சி செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து அந்த இவென்ட்டில் இருப்பது போன்று பேசினார். நான் தனியாக இருக்கும்போது பாலியல் ரீதியாக டிரேட் பண்ணுகிற மாதிரி பேசினார்.”
“நான் அங்கு இருக்கும் நேரம் அவருக்கு தெரிந்துள்ளது. அதை நினைத்து பயம் வந்துவிட்டது. நான் யாரையும் சார்ந்திராமல் வேலை பார்க்கும் பெண். யாரோ ஒருவர் அவருக்கு என்னை பற்றிய தகவல்களை கொடுத்துள்ளார். தி நகரில் உள்ள ஸ்ரீதர் மாஸ்டரின் ஸ்டுடியோவில் தான் இது நடந்தது. மாஸ்டர் அப்போது அங்கு இல்லை. இவென்ட்டில் உள்ள யாரோ தான் தகவல் கொடுத்திருக்கிறார்கள். காவற்துறை மிகவும் உதவியாக உள்ளனர். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என அமலா பால் தெரிவித்துள்ளார்.