Home இலங்கை எம்மை திட்டுவோருக்கு அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் உண்டு என்பது மறந்துவிட்டது :

எம்மை திட்டுவோருக்கு அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் உண்டு என்பது மறந்துவிட்டது :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் மேடைகளில் எம்மை கடுமையாக திட்டித் தீர்ப்போருக்கு அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது மறந்துவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயி ஒருவரின் புதல்வர் நாட்டின் ஜனாதிபதியானதும் நாட்டில் விவசாயத்துறை தழைத்தோங்கும் என்றே மக்கள் கருதினார்கள் எனவும், துரதிஸ்டவசமாக அவ்வாறு நடக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாம் கடன் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தி வரும் இவர்களுக்கு இவர்கள் பெற்றுக் கொண்டுள்ள பாரியளவு கடன் பற்றி தெரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்மை அவமரியாதை செய்து எம்மை சிறையில் போடுவதாக சூளுரைக்கும் ஒரு சிலருக்கு அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது பற்றிய மறந்து விட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பதவி என்பது பொறுப்பு வாய்ந்த ஓர் பதவியாகும் எனவே ஜனாதிபதி அவர்களே அவசரப்பட்டு கோபப்படாது நிதானமாக பேசுங்கள் என தாம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More