குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு சிறுவர் சிறுமியரை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இந்தக் கோரிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களிடம் விடம் விடுத்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக சிறுவர் சிறுமியரை சிலர் பயன்படுத்தி வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதனால் அவர்கள் உடல் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றனர் என அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளையும் சிறுவர் துஸ்பிரயோகமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1929 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி சட்டத்தரணி மரினி டி லிவேரா கோரியுள்ளார்.