ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும் அல்வார் பாராளுமன்ற தொகுதிகள், மண்டல்கர் சட்டமன்ற தொகுதி, மேற்கு வங்காளத்தில் உள்ள உலுபெரியா பாராளுமன்ற தொகுதி, நவுபாரா சட்டமன்ற தொகுதிகளுக்க்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றியை பெற்றுள்ளது. கடந்த 29-ம் திகதி நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன அஜ்மீர் மற்றும் அல்வார் பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ரகு ஷர்மா மற்றும் கரண் சிங் யாதவ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
மண்டல்கர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தாகத் 12976 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவ்வாறே, மேற்கு வங்காளத்தின் உலுபெரியா பாராளுமன்ற தொகுதி, நவுபாரா சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 5 இடங்களிலும் பா.ஜ.க தோல்வியை சந்தித்துள்ளது.
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு கடுமையான அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறிது.