குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ரவி கருணாநாயக்கவினால் கட்சிக்கு பெரும ;அவமானம் ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சரும் கட்சியின் உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். துணைத் தலைவர் பதவியை ரவி கருணாநாயக்க இனி ராஜினாமா செய்தாலும் இனி பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரவி கருணாநாயக்க பற்றி குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக கட்சிக்கு கிடைக்கக்கூடிய வாக்குகள் கிடைக்காமல் போகக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். காலம் தாழ்த்தியேனும் ரவி கருணாநாயக்கவை கட்சிப் பதவியிலிருந்து நீக்குவதற்கு கட்சித் தலைமை எடுத்த தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.