குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச கால்பந்தாட்டப் பேரவைக்கு எதிராக, அதன் முன்னாள் தலைவர் செப் பிளெட்டர் (Sepp Blatter) சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தி வருகின்றார். தமது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கிக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு சர்வதேச கால்பந்தாட்டப் பேரவைக்கு எதிராக வழக்குத் தொடர செப் பிளட்டர் தீர்மானித்துள்ளார்.
சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் தலைவராக செப் பிளெட்டர் 17 ஆண்டுகள் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக பிளெட்டருக்கு விளையாட்டுத் தொடர்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 81 வயதான சுவிட்சர்லாந்து பிரஜையான பிளெட்டர், தாம் தற்போதைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற போதிலும், அது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.