குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க உளவுப் பிரிவான எப்.பி.ஐயின் கண்காணிப்பு அறிக்கை தொடர்பான ஆவணத்தை மாற்றியதாக குடியரசு கட்சி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு தேர்தல்கள் தொடர்பிலான எப்.பி.ஐ.யின் கண்காணிப்பு விபரங்கள் உள்ளடங்கிய ஆவணத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் செனட்டர் அடெம் சிசிப் தெரிவித்துள்ளார்.
குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட குழுவில் இந்த ஆவணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, எனினும் ஜனாதிபதி ட்ராம்பின் அனுமதியுடனேயே இந்த ஆவணம் பகிரங்கப்படுத்தப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அனுமதி வழங்கினால் இந்த ஆவணம் இன்றைய தினம் வெளியிடப்படக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ட்ராம்பின் மீது குற்றம் சுமத்தும் வகையில் எப்.பி.ஐ செயற்பட்டதாகத் தெரிவித்து இந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.