இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் முகநூலில் வருகின்ற செய்திகளின் பதிவேற்றத்தில் முக்கிய மாற்றங்களை கொண்டு வருவது பற்றி அறிவிப்பதற்கு முன்பே, முகநூல் (Face Book) பயன்பாட்டாளர்கள் அந்த பக்கத்தில் மிகவும் குறைந்த நேரமே செலவிட்டுள்ளனர்.
சில பிரபலமான காணொளிகளை வெளியிடுவது சமூக வலைதளத்தில் செலவிடும் நேர அளவை சுமார் 5 சதவீதம் குறைத்திருப்பதாகவும், அல்லது தினமும் சுமார் 50 மில்லியன் மணிநேரம் என்றும் 2017ஆம் ஆண்டு கடந்த 3 மாதங்களாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், இந்த வீழ்ச்சிக்கு பின்னரும் எதிர்பார்த்ததைவிட சிறந்த முடிவுகளை பெற்றிருப்பதாக அது கூறியுள்ளது.
முகநூல் (Face Book) பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தொடர்பாடலை முதன்மை படுத்துவது என்பது மிகவும் ஊக்கமளிப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி Mark Zuckerberg தெரிவித்திருக்கிறார்.
முகநூலில் (Face Book) செலவிடும் நேரத்தை அதிகரிகரிப்பதைவிட, மக்கள் ஒருவொருக்கொருவர் இணைந்திருப்பதற்கு உதவுவது மிகவும் முக்கியமானது” எனவும், மக்களின் நல்வாழ்வுக்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இந்த சேவை நல்லதாக அமையும் என்று நாம் உறுதி செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்கள், குடும்பத்தினரிடம் இருந்து பதிவிடப்படுபவற்றை முதன்மைப்படுத்துவதற்காக செய்திப் பதிவேற்றங்களில் மாற்றங்களை உருவாக்க போவதாக கடந்த ஜனவரி மாதம் முகநூல் (Face Book) தெரிவித்திருந்தது. இதற்காக வணிகம் மற்றும் செய்தி வெளியீடுகளில் இருந்து வருகின்ற உள்ளடக்கங்களை குறைவாக பிரபலப்படுத்தும் என்றும் தெரிவித்தது.
கடந்த ஆண்டு கடைசி மூன்று மாதங்கள் மாதாந்தர பயன்பாட்டாளர்கள் 14 சதவீதம் அதாவது 2.13 பில்லியன் உயர்ந்து இருந்துள்ளது. இது கடந்த காலாண்டை விட சற்று குறைவான வளர்ச்சியே.
முகநூலின் (Face Book) விளம்பர வருவாய் ஈட்டும் அமெரிக்காவிலும், கனடாவிலும் தினமும் பயன்படுத்துவோர் சுமார் 7 லட்சமாக வீழ்ச்சியடைந்து அந்த காலாண்டில் 184 மில்லியனாக இருந்துள்ளது. ஆண்டு வருவாய் கடந்த ஆண்டு 47 சதவீதமாக 40 பில்லியன் டாலருக்கு மேலாக இருந்தது. லாபம் 56 சதவீதமாக சுமார் 16 பில்லியனாகும் என்று முகநூல் (Face Book) தெரிவித்துள்ளது. அமெரிக்க வரி சட்டம் மூலம் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் 2.3 பில்லியன் டாலர் செலுத்த வேண்டியிருந்தும் இந்த லாபம் கிடைத்துள்ளதாக இந்த நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகளை மிகவும் வலுவானது என்று தெரிவித்திருக்கும் ஜிபிஹெச் இன்சைட்ஸ் ஆய்வாளர் டேனியல் இவெஸ், முகநூலின் (Face Book) இந்த உத்திப்பூர்வ திட்டம் சரியாக நேரத்திற்கு சரியான மருந்து என்று விளக்கியுள்ளார். முகநூலின் (Face Book) பங்குகள் தொடக்கத்தில் 4 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. ஆனால், இந்த முடிவுகள் வெளியான பின்னர் விரைவாக ஏறுமுகம் கண்டது.