குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தனியாக சட்டம் அமுல்படுத்தப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி பக்கச்சார்பாக செயற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் பணத்தை களவாடிய அனைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸக்களை ஐக்கிய தேசியக்கட்சி பாதுகாப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைவருக்கும் சட்டம் ஒரேவிதமாக அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.