Matthieu Reeb, secretary general of the Court of Arbitration for Sport (CAS), announces the court’s decision regarding dozens of Russian athletes banned for doping. (FRANCOIS-XAVIER MARIT / AFP/GETTY IMAGES)
ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய 28 ரஸ்ய வீரர்களின் ஆயுட்கால தடையை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ரஸ்ய வீரர்-வீராங்கனைகள் அரசின் உதவியுடன் ஊக்க மருந்து பயன்படுத்தி போட்டியில் பதக்கம் வென்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் 43 ரஸ்ய வீரர்-வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்க ஆயுட்கால தடை விதித்திருந்தது. இதில் ஒருவர் தவிர 42 பேரும் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் குறித்த வீரர்-வீராங்கனைகளில் 28 பேர் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த ஆயுட்கால தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏனைய 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையையும் தீர்ப்பாயம் குறைத்துள்ளதுடன் 3 பேர் மீதான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது தென்கொரியாவில் எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதேவேளை இந்த தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்ய ஆலோசனை நடத்தி வருகிறது.