குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் முக்கிய சட்டம் ஒழுங்கு நிறுவனங்கள் மீது அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அமெரிக்க உளவுப் பிரிவான எப்.பி.ஐ மற்றும் நீதித் திணைக்களம் என்பனவற்றின் நேர்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஜனாதிபதி; ட்ராம்ப் விசாரணைகளை அரசியல் மயப்படுத்துவதற்கு சில அதிகாரிகள் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது ரஸ்யாவுடன் தொடர்பு பேணியதாக ட்ராம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டு குறித்த விசாரணைகள் நேர்மைத்தன்மையுடன் நடைபெறவில்லை எனவும், பக்கச்சார்பான அடிப்படையில் நடைபெற்றதாகவும் ட்ராம்ப் தெரிவித்துள்ளார்.