குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். சில படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து விசாரணைகளுக்கும் இராணுவம் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், விசாரணைகள் கால தாமதம் அடைந்தால் அதற்கு இராணுவம் பொறுப்புச் சொல்ல முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு தமிழ் மக்களுடன் இராணுவத்தினர் சுமூகமான உறவுகளை கட்டியெழுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.