குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்த சோவியத் ரஸ்ய படைவீரர்களுக்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அஞ்சலி செலுத்தியுள்ளார். உலகப் போரின் போது ஸ்டாலின்கார்ட் என்னும் பகுதியில் வைத்து இடம்பெற்ற மோதல்களில் 1.1 மில்லியன் சோவித் ஒன்றிய படையினரும், 8 லட்சம் நாசி ஜெர்மன் மற்றும் ரோமனிய படையினரும் கொல்லப்பட்டிருந்தனர்.
வொலோகார்ட் என தற்போது அழைக்கப்படும் குறித்த யுத்தம் இடம்பெற்ற நகரில் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தது.
1942-43 ஆண்டுகளில் இடம்பெற்ற இந்த மோதல் ஒர் திருப்பு முனையாக அமைந்தது எனக் குறிப்பிட முடியும். நாசி படையினர் ரஸ்யாவிற்குள் பிரவேசிப்பதனை தடுப்பதற்கு இந்தப் போர் வழியமைத்தது எனலாம். தாய்நாட்டின் மீதான நேசத்தை படையினரின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தி நிற்பதாக ரஸ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.