குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலை தீவில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாலைதீவில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. எனினும் எதிர்க்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நசீத்தை விடுதலை செய்யுமாறு மாலைதீவு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பினை கேட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் வீதிகளில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்னர்.
இதன்போது, மாலைதீவு காவல்துறையினர் எதிர்க்கட்சி ஆதரவாளர்களை கலைந்து செல்லுமாறு கோரி, கண்ணீர்பு; புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போதைய ஜனாதிபதியை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.