நியூஸிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியது.
கப்டன் பிரித்வி 29 ரன்களில் அவுட்டானவுடன், களமிறங்கிய சுப்மன் கில் 31 ரன்களில் வெளியேற, தொடக்க வீரரான மஞ்சோட் கல்ராவும், ஹர்விக் தேசாயும் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய வீரர் மஞ்சோட் கல்ரா கடைசி வரை அவுட்டாகாமல் அடித்த சதமும், தேசாய் அடித்த 47 ரன்களும் இந்திய அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழந்திருந்த நிலையில் 220 ரன்களை அடித்து உலகக்கோப்பையை வெல்ல வித்திட்டது. இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி ஏற்கனவே கடந்த 2000, 2008 மற்றும் 2012 ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பைகளையும் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகப் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் போட்டியிடுகின்றன. இதில் நாணச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தநிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்தநிலையில் 217 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கின்றது.