குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்க அணியின் தலைவராக இளம் வீரர் ஏய்டன் மார்க்ராம் (Aiden Markram) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடரை கருத்திற் கொண்டு இரண்டு போட்டிகள் மட்டுமே அனுபவம் உடைய மார்க்ராமை தென் அபிரிக்க கிரிக்கட் நிர்வாகம், சர்வதேச ஒருநாள் போட்டித் தொடருக்கான தலைவராக அறிவித்துள்ளது.
பெப்டுப்லெஸீ உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியுடனான எஞ்சிய 5 ஓருநாள் போட்டிகளிலும் மார்க்ராம் தென் ஆபிரிக்க அணியை வழிநடத்த உள்ளார். 19 வயதுக்கு உட்பட்ட இளைஞர் அணிக்கும் மர்க்கராம் 2014ம் ஆண்டில் தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிரேஸ்ட வீரர்களைக் கொண்ட அணிக்கு தலைமை தாங்குவது சவால் மிக்கதும், மகிழ்ச்சியானதுமான தருணம் என மர்க்கராம் தெரிவித்துள்ளார்.