Home இலங்கை கடந்தகாலத் தவறுகள் அனைத்தையும் மறந்து, மன்னிக்க வேண்டும் என்கிறார் கூரே..

கடந்தகாலத் தவறுகள் அனைத்தையும் மறந்து, மன்னிக்க வேண்டும் என்கிறார் கூரே..

by admin

கடந்த கால தவறுகள் அனைத்துக்கும், அனைத்தையும் மறந்து அவற்றுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும், அடிப்படைவாத, பிரிவினைவாத, இனவாத கருத்துக்களை வெளியிடுவதனை தவிர்க்க வேண்டும் எனவும் வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ஆதி காலத்தில் இருந்து இன்று வரை சுதந்திரத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக இலட்சக்கணகான வீரர்கள் அவர்களுடைய இரத்தைத்தையும் சிந்தியும் உயிரையும் அர்ப்பணிப்பு செய்துள்ளனர்.

எமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தம் உயிர்களை அர்பணித்த வீரர்களுக்கும் இதய பூர்வமான மரியாதையை நாம் செலுத்த வேண்டும். எங்கள் தாய்நாடு ஒரு சிறிய தீவாக இருந்தாலும் அது அமைந்துள்ள முக்கியத்துவம் காரணமாக ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுத்தது. அவர்களுக்கு எதிராக செய்த போராட்டம் செய்வதர்கள் எமது நாட்டு வீரர்கள்.

எமது நாட்டின் சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள சிங்கள தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்தனர். சுதந்திரத்தை பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. தற்போது வெளிநாட்டில் இருந்து படையெடுத்து வந்து ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை. ஆனால் எமது தாய்நாட்டில் இருந்து வெளிநாட்டு ஆக்கிரமிப்பளர்களுக்கு உதவி செய்யும் துரோகிகள் உள்ளனர். அது கவலைக்கு உரிய விடயம்.

இன மத மொழி குல பேதமின்றி ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் போல ஒற்றுமையாக இருக்க வேண்டும். நல்லாட்சிக்கு எங்களின் உதவிகளை வழங்க வேண்டும். எதிர்வாத கருத்துக்களை தவிர்த்து பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொருளாதார அனுசரணை கொடுப்பதற்காக எதிர்கால தலைமுறைக்கு நல்ல வாழ்கையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

கடந்த காலத்தில் நடந்த இழிவான செய்திகளை மறந்து போக வேண்டும் புதிய இலங்கையை கட்டியெழுப்ப ஊக்கம் கொடுக்க வேண்டும் கடந்த கால தவறுகள் அனைத்துக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும் அடிப்படைவாத பிரிவினைவாத இனவாத கருத்துக்கள் இல்லாமல் போக வேண்டும். என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More