188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 34 அறிக்கைகளுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு அவர் கோரியுள்ளார். 2011ம் ஆண்டிலேயே தாம் பிணை முறி மோசடிகள் பற்றிய விடயங்களை அம்பலப்படுத்தியதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
Spread the love