204
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவின் உயர் அதிகாரி தென் கொரியாவிற்கு பயணம் செய்ய உள்ளார். வடகொரியா, அந்நாட்டு பெயரளவிலான அரச தலைவர் கிம் யோங் நாமை, தென் கொரியாவிற்கு அனுப்பி வைக்க உள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக கிம் யோங் தலைமையிலான பிரதிநிதிகள் தென் கொரியாவிற்கு பயணம் செய்ய உள்ளனர்.
வட தென் கொரிய நாடுகளின் வீர வீராங்கனைகள் ஒரே கொடியின் கீழ் ஒலிம்பிக் அணி வகுப்பில் ஈடுபட உள்ளனர். அணுத் திட்டங்கள் தொடர்பில் வடகொரியா மீது சர்வதேச அளவில் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love