காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதால் எல்லைப்பகுதியை அண்மித்துள்ள 84 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்றையதினமும் சில ரஜோரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளது இந்தத் தாக்குதல்களில் ஒரு ராணுவ தளபதி உட்பட இந்திய ராணுவத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளது;ன’ நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 84 பாடசாலைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 3 தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.