144
எல்லை மீறிச்சென்று மீன் பிடித்ததாக 47 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் வந்து அவர்கள் மீன்பிடித்ததாகவும், அதனால் அவர்களைக் கைது செய்ததாகவும் பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில், நல்லெண்ண அடிப்படையில் 292 இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் விடுதலை செய்துள்ள நிலையில் கடந்த ஜனவரி 19ம் திகதி எல்லை மீறி மீன்பிடித்ததாக 17 இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love