குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அலோசியஸின் கைது ஓர் நாடகமேயாகும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தனர். அரசியல் தேவைகளுக்கு அமையவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தாம் கைது செய்யப்படப் போகின்றோம் என்பதனை முன்கூட்டியே அர்ஜூன் அலோசியஸ் அறிந்திருந்தார் எனவும் எனவேதான், அலோசியஸ் வெள்ளை சேர்ட்டும் டையும் அணிந்திருந்தார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சாதாரண நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தால், உடுத்திய உடையுடன் அழைத்துச் செல்லப்பட்டிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை இலக்கு வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிக்கும் நோக்கில் கைதுகள் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.