163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதனைப் போன்று, அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்டர் போல் காவல்துறையினர் உதயங்கவை கைது செய்ததனைப் போன்றே, அர்ஜூன் மகேந்திரனையும் கைது செய்வர் என அவர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து உதயங்கவை கைது செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love