2014ஆம் ஆண்டில் சீனாவுக்கு எதிராக ஹொங்காங்கில் அம்ப்ரெல்லா புரட்சி(Umbrella Revolution) யை தலைமை ஏற்று நடத்திய மூன்று இளைஞர்களும் சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹொங்காங் சட்டசபையில் வெற்றி பெற்ற இம்மூவரும் சட்டசபை விதிகளுக்கு முரணாக நடத்து கொண்டதாக சீனா குற்றஞ்சாட்டியிருந்தது. அத்துடன் அவர்கள் மூவரும் பதவி நீக்கப்பட்டதுடன் அவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹொங்காங் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
ஹொங்காங் சீனாவுடன் இணைந்திருக்க வேண்டுமா என மக்கள் கருத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என 2014-ம் ஆண்டு சீனாவில் வெடித்த அம்ப்ரெல்லா இயக்க போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தியர்வர்களான 24 வயதான நாதன் லா 21 வயதான ஜோஸ்வா வாங் மற்றும் 27 வயதான அலெக்ஸ் சோ ஆகிய மூவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.