குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கேனும் சிரியாவில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கியா நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் நிலைகொண்டுள்ள பகுதிகளில் அரசாங்கப் படையினர் கடுமையான வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குளோரின் வாயு கலந்த குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் யுத்தக் குற்ற நிபுணர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இரசாயன ஆயுதங்கள் எதனையும் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என சிரிய அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது