குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜேவின் கோரிக்கையை பிரித்தானிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமக்கு எதிரான பிடிவிராந்து உத்தரவினை தள்ளுபடி செய்யுமாறு அசான்ஜே பிரித்தானிய நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். பிரித்தானியாவிற்கான ஈக்வடோர் தூதரகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அசான்ஜே தங்கியுள்ளார்.
பிடிவிராந்து உத்தரவு தள்ளுபடி செய்யப்பட்டால் மட்டுமே தூதரகத்தை விட்டு வெளியேற முடியும் என்பதனால், பிரித்தானிய நீதிமன்றின் இந்த உத்தரவு அசான்ஜேவிற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பில் சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதனை தவிர்க்கும் நோக்கில், அசான்ஜே ஈக்வடோர் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.