திருப்பதிக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் பல முக்கிய பகுதிகளில் 1400 கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை நடைபாதை மார்க்கங்கள் மாடவீதிகள், முக்கிய சந்திப்புகள், திருப்பதியில் உள்ள பல முக்கிய பகுதிகளில் 1400 கண்காணிப்பு கமராக்கள் பொருத்டதப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
4 கட்டங்களாக பிரித்து அதிகாரிகள் கமராக்களை பொருத்தி வருவதாகவும் முதல் கட்டமாக 256 கமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதிக்குள், முதல்கட்ட பணிகள் நிறைவுறும் எனவும் விரைவில் 4 கட்டப் பணிகளும் நிறைவு பெற்று, எதிர்வரும் ஜுன் மாத இறுதிக்குள் முழுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் திருமலை மற்றும் திருப்பதி கொண்டு வரப்பட உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.