பார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்பை அங்கீகரித்து அந்த வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் கீழ் நிர்வகித்து விளையாட வைக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாக தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி நான்கு முறை உலகக்கோப்பையை வென்றுள்ள போதும் பார்வையற்ற வீரர்களுக்கு அங்கீகாரம் மற்றும் நிதியுதவி குறைவாகவே கிடைக்கிறது.இந்நிலையில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாக குழுத் தலைவரான வினோத் ராய்க்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இதனை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பார்வையற்ற வீரர்களை கட்டுப்பாடு சபையின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதன்மூலம் , வீரர்கள் நீண்ட கால பயன்களை பெறுவதுடன் உறுதியுடன் விளையாடுவார்கள் எனவும் சச்சின் தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.