குளோபல் தமிழ் செய்தியாளர்
ஜெர்மனிய அதிபர் அன்ஜலா மோர்கல் இறுதியில் கூட்டணி அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டுள்ளார். மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சியானது, மத்திய இடதுசாரி சோசலிச ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. ஜெர்மனியில் சில மாதங்களாக அரசியல் ஸ்திரமற்ற நிலைமை நீடித்து வந்திருந்தது. தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலைமை நீடித்து வந்தது.
இந்த நிலையில், மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சி தற்போது கூட்டணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. எனினும், மத்திய இடதுசாரி சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் இதுவரையில் கூட்டணி அரசாங்கம் தொடர்பில் பூரண இணக்கத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.