அதிவேக வீதியில் இடம்பெறுகின்ற விபத்துக்களில் 27 வீதத்துக்கும் அதிகமானவை அதிக வேகம் காரணமாக இடம்பெறுவதனால் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக அளவீட்டு இயந்திர கட்டமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது.
இந்த புதிய இயந்திர கட்டமைப்பை எதிர்வரும் 14ம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக வாகனங்களின் வேகம் கண்காணிக்கப்படுவதுடன், வேகக் கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களின் புகைப்படங்கள் வாயிலில் ,ருக்கும் கணினி ஊடாக அச்சிடப்பட உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தப் புகைப்படங்களில் வாகன இலக்கம், கண்காணிப்பு நேரம் மற்றும் அந்த சந்தர்ப்பத்தில் பயணித்த வேகம் போன்ற தகவல்கள் அச்சிடப்பட உள்ளதாகவும் ,ந்த செயற்பாடுகளை இரவு நேரங்களிலும் முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது