150
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை பாகிஸ்தான் படையினர் சிறு கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் அதே பகுதியை சேர்ந்த 45 வயது பெண் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எல்லையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் இந்த ஆண்டில் மட்டும் பொதுமக்கள் 9 பேர் உள்பட 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love